செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்று காலை மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது August 29, 2017

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்று காலை மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது


நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலையில் பராமரிப்பு மற்றும் யுரேனியம் எரிப்பொருள் நிரப்பும் பணிகள் முடிவடைந்து மீண்டும் இன்று காலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிக மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய அணுஉலையாக, நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் திகழ்கிறது. 

அணு உலையில் வருடாந்திர பாரமரிப்பு பணிக்காகவும், எரிந்த எரிப்பொருட்களை அகற்றிவிட்டு புதிய செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிப்பொருட்கள் நிரப்புவதற்காகவும் கடந்த ஏப்ரல் மாதம் மின்சாரம் உற்பத்தி செய்யபடுவது நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில் அணுபிளவு கிரிட்டிகாலிட்டி என்ற தொடர் அணுபிளவு நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை டர்பன் ஜெனரேட்டர் இயக்கப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. முதலில் 80 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், படிபடியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.