நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
அதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்தோடு திரும்பி சென்ற வண்ணம் உள்ளனர்.
இதேபோல், நொய்யலின் பிறப்பிடமான கோவை குற்றாலம் பகுதியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி கோவை குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கனமழை தொடர்ந்தால் குளிக்க தடை நீட்டிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குற்றால அருவிகளில் குளிக்கத்தடை விதிக்கப்பட்டதை அடுத்து, பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். அங்கு சுற்றுலா பயணிகள் அருவிகளில் நீராடி செல்கின்றனர்.