சனி, 26 ஆகஸ்ட், 2017

அமெரிக்காவுக்கு எதிராக வடகொரியா களமிறக்கும் புதிய ஆயுதங்கள்! August 25, 2017

அமெரிக்காவுக்கு எதிராக வடகொரியா களமிறக்கும் புதிய ஆயுதங்கள்!


திட எரிபொருளைப் பயன்டுத்தி இயங்கக்கூடிய ராக்கெட் எஞ்சின்களைத் தயாரிக்க வடகொரிய அதிபர் அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொரிய தீபகற்பப் பகுதிகளில் பதற்றம் ஏற்படுத்தும் நடவடிக்கையில்  தொடர்ந்து ஈடுபட்டுவந்த வடகொரியாவுக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்நிலையில் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பில் அமெரிக்கா கொண்டுவந்தது. 

இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்படும் என வடகொரியா அறிவித்ததால் பசிபிக் கடற்பிராந்திய நாடுகளில் பதற்றம் அதிகரித்தது. இருப்பினும், இந்த அறிவிப்பை அந்நாட்டு அரசு கிடப்பில் போட்டுள்ளது. 

இதற்கிடையே, திட எரிபொருளைப் பயன்படுத்தும் ராக்கெட்டுகளைத் தயாரிக்க ராணுவத்துக்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார். இதே போல் போரில் பயன்படுத்தப்படும் பல்வேறு ஆயுதங்களைப் புதிதாகத் தயாரிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ செய்திநிறுவனமான கேசிஎன்ஏ அறிவித்துள்ளது.