சிறப்பாக செயல்படாத அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என நிதி ஆயோக் அமைப்பு பரிந்துரைத்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்து விட்டது என்பதையோ, அதற்காக நிதி ஆயோக் பட்டியலிட்டுள்ள காரணங்கள் அனைத்தும் சரியானவை என்பதையோ யாரும் மறுக்க முடியாது என கூறியுள்ளார்.
ஆனால், அதற்கான தீர்வாக நிதி ஆயோக் முன் வைத்துள்ள யோசனைகள் தான் மிகவும் ஆபத்தானவை என குறிப்பிட்டுள்ள ராமதாஸ், அரசு பள்ளிகளின் கல்வித் தரம் குறைந்து விட்டது என்றால், அதை மேம்படுத்துவதற்கு திட்டங்களை வகுத்து செயல்படுத்துவது அரசின் பணியாகும் என கூறியுள்ளார்.
ஆனால், நிதி ஆயோக் அமைப்போ எதிர்மறையான யோசனைகளை வழங்கி வருவதாகவும், சீரழிவுக்கு வழி வகுக்கும் அந்த அமைப்பை கலைக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.