
காலநிலை மாற்றத்தால் சிலியில் உள்ள அருங்காட்சியகத்தில் பதப்படுத்தப்பட்டு வரும் மம்மிக்களை பாதுகாக்க வேண்டும் என அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகிலேயே மிகவும் பழமையான மம்மிக்கள் இந்த அருங்காட்சியகத்தில் தான் உள்ளது எனவும், எனவே, யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரிய சின்னம் வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தற்போது எழுந்துள்ள காலநிலை மாற்றத்தால், பாக்ட்ரீயாக்களால் அருங்காட்சியகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மம்மிக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.