அதிமுகவில் அனைவரும் ஒன்று சேரவில்லை என்றால் பல ரகசியங்களை வெளியிடப்போவதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜன் மிரட்டல் விடுத்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் குற்றச்சாட்டுகளுக்கு ஆனானவர்கள் ஒதுங்கிகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களில் சிலர் தோல்வி அடைந்ததற்கு காரணமே இயக்கத்தில் இருக்கக்கூடிய சில துரோகிகள் தான், அவர்களால் ஏற்பட்ட மன உளைச்சலே ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு மரணிக்க காரணமானவர்கள் ஆவார்கள் என நாகராஜன் எம்.பி கூறினார்.
அதிமுகவில் நிகழும் பிரச்னையை அனைத்து தரப்பினரும் பேசி தீர்க்கவேண்டும் என வலியுறுத்திய நாகராஜன், இயக்கத்திற்காகவே சிறைக்கு சென்றவர் தினகரன் என்று குறிப்பிட்டார்.
ஜெயலலிதா இருக்கும் போதே சசிகலா மூலம் தான் கட்சி முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
சசிகலா மூலம் பதவி அடைந்தவரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் இந்த அமைச்சரவையை உருவாக்கியதே அவர் தான் என்றும், அன்றே துணை முதல்வராக டி.டி.வி. தினகரனை பதவியேற்றுக்கொள்ளுமாறும் வலியுறுத்தியவரே பழனிசாமி என்றும் பரபரப்பு தகவலை நாகராஜன் தெரிவித்தார்.
சசிகலா மூலம் பதவி அடைந்தவர் நான் இல்லை என்று எவராலும் கூற முடியாது, அந்த நன்றியுணர்வு தற்போது எவருக்கும் இல்லை என்றும் நாகராஜன் கூறினார்.