வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

நீட் ஒதுக்கீட்டில் அரசு பள்ளிகளுக்கு 0.5% மட்டும் தானா? August 24, 2017

நீட் ஒதுக்கீட்டில் அரசு பள்ளிகளுக்கு 0.5% மட்டும் தானா?



தமிழகத்தில் 12ம் வகுப்பு எழுதியவர்கள் - 8,93,262 பேர்
தேர்ச்சி பெற்றவர்கள் - 8,22,838 பேர்
இதில் மருத்துவம் படிக்கத் தேவையான அறிவியல் பாடம் படித்தவர்கள் - 4.2 லட்சம்
தமிழகத்தில் சி.பி.எஸ்.இ -யில் 12ம் வகுப்பு எழுதியவர்கள் - 13,000 பேர்
சி.பி.எஸ்.இ -யில்  தேர்ச்சி பெற்றவர்கள் - 12,575
சி.பி.எஸ்.இ -யில்  மருத்துவம் படிக்கத் தேவையான அறிவியல் பாடம் படித்தவர்கள் - 4675 பேர் 
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் - 83, 859
தேர்ச்சி பெற்றவர்கள் - 32,570
அரசு பொது மருத்துவ இடங்கள் - 3534

இந்த 3534 இடங்களில் மாநிலக்கல்வித்திட்டத்தின் கீழ் இடம் பெறுபவர்கள் - 2224
இந்த 3534 இடங்களில் சி.பி.எஸ்.இ திட்டத்தின் கீழ் இடம் பெறுபவர்கள் - 1310
இன்று வெளியிடப்பட்ட தரவரிசைப்பட்டியலில் முதல் 3534 இடங்களைப் பெற்றவர்கள் தான் அரசு கல்லூரி மற்றும் ஒதுக்கீட்டில் உள்ள 3534 இடங்களை பெற போகிறார்கள். ஆனால், இதன் அடிப்படையில் இந்த 3534 மாணவர்களில் 2224 பேர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள். 1310 பேர் சி.பி.எஸ்.இ உள்ளிட்ட பிற பாடத்திட்டங்களில் படித்தவர்கள். சி.பி.எஸ்.இ உள்ளிட்ட பிற பாடத்திட்டங்களில் படித்து தேர்வானவர்கள் 1310 என்றாலும், அதில் 90%க்கு மேல் சி.பி.எஸ்.இ-யில் மட்டும் படித்தவர்கள் தான். ஏனென்றால், சி.பி.எஸ்.இ தவிர மற்ற எஸ்.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ போன்ற பாடத்திட்டங்களில் படித்து நீட் தேர்வுக்காக  விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையே மிகவும் குறைவு.

இந்த தரவுகளின்படி,  தமிழகத்தில் மாநில கல்வித்திட்டத்தின் கீழ் மருத்துவம் படிக்கத் தகுதியான அறிவியல் பாடப்பிரிவில் படித்து 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 4.2 லட்சம் பேரில் 2224 பேர் தேர்வாகியுள்ளனர். இது வெறும் 0.5%.

அதேநேரத்தில், தமிழகத்தில் சி.பி.எஸ்.இ திட்டத்தின் கீழ் மருத்துவம் படிக்கத் தகுதியான அறிவியல் பாடப்பிரிவில் படித்த 4,675 பேரில் சுமார் 1250 பேர் அரசு ஒதுக்கீட்டில் தேர்வாகியுள்ளனர். இது 26.7% ஆகும்.

அதிலும், மாநில பாடத்திட்டத்தில் படித்த 2224 பேரில் 403 பேர் 2016ம் ஆண்டே 12ம் வகுப்பை முடித்தவர்கள். அதாவது, 2016ம் ஆண்டே 12ம் வகுப்பை முடித்துவிட்டு அடுத்த ஓராண்டு நீட் தேர்விற்காக தயாரித்துள்ளனர்.

அதேபோல், இந்த தரவரிசைப்பட்டியலில் முதல் 3534 இடங்களைப் பெற்று அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க இருப்பவர்களில் 1821 பேர் ஏற்கனவே நீட் தேர்வு எழுதிய அனுபவம் உள்ளவர்கள். அதாவது கடந்த ஆண்டோ அதற்கு முன்பாகவோ நீட் தேர்வு எழுதிய வாய்ப்பு கிடைக்காததால் இந்த முறையும் முயற்சி வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள்.

இதைக் கழித்துவிட்டு பார்த்தால் அரசு ஒதுக்கீட்டில் இருக்கும் 3534 இடங்களில் இந்த ஆண்டு 12ம் வகுப்பை முடித்துவிட்டு உடனே நீட் தேர்வு எழுதியவர்கள் 1731 பேர் மட்டும் தான். இதில், பலரும் கடந்த ஓராண்டாக நீட் தேர்விற்காக சிறப்பு வகுப்புகள் சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.