திங்கள், 28 ஆகஸ்ட், 2017

பொதுமக்களின்_ஒருவனாக*

*பொதுச்செயலாளராக_அல்ல_பொதுமக்களின்_ஒருவனாக*
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
பீஜே குற்றவாளியா?
நான் அதிகம் முகநூலில் பதிவிட்டு முகம் காட்டாதவன், இருப்பினும் காலத்தின் கட்டாயமே இப்பதிவுக்கு காரணம்..
நான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயாலாளராக இதை பதிவிடவில்லை, பொது மக்களில் ஒருவனாக இருந்தே இதனை பதிவிடுகிறேன், இதை நம்புவது சிரமம் என்றாலும் இதுவே உண்மை.

சகோ பீஜே ஒரு பெண்ணோடு ஆபாச உரையாடலில் ஈடுபட்டுவிட்டார், இதோ அதற்கான ஆதாரம், என்ன நடவடிக்கையை ஜமாஅத் எடுக்கப்போகிறது என்கிற சத்தம் நமது செவிப்பறையை கிழிக்காவிட்டாலும், சத்தமில்லாமல் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய யுத்தத்தையே நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
பீஜே பேசியது உண்மை என்றால் ஆதாரத்தோடு தலைமையகத்திற்கு வந்து 10 நாட்களுக்குள் நிரூபிக்க நானே அழைப்புவிடுத்தேன். அதை தொடர்ந்து, வா வந்து நிரூபித்துக்காட்டு என்று எங்கள் அமைப்பை சார்ந்தவர்கள் எதிரிகளுக்கு சவால் விட, நாங்கள் ஏன் உன் அலுவலகத்திற்கு வரணும் ஆதாரத்தை தரணும், அதெல்லாம் அழிக்கப்பட்டுவிட்டது, அசிங்கம் நடந்த இடத்துக்கு வா என்றால் எப்படி வருவது என்று ஆடியோவை பரப்பியவர்கள் புலம்ப இப்படியே நாட்களும் நகருது.
பொய் என்றால் போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடு, முபாஹலாவுக்கு வா இது தான் தீர்வு, என வண்டி அந்த எல்லையை தாண்டாமல் அங்கேயே நின்றுக் கொண்டிருக்கிறது....
வெளியிட்ட ஆடியோ, செட்டிங் என்பதற்கு லாஜிக்கல் கேள்விகள் நிறைய கேட்கலாம், தொழிநுட்ப ரீதியாக நிறைய பதில் சொல்லலாம் அதுக்கு நான் வரல
சில கேள்விகள் நிலுவையில் நிற்கிறது அதற்கு நான் பதிலளிப்பது பொறுத்தமாக இருக்கும், அது தான் இப்பதிவின் நோக்கம்.
1. பீஜே உருவாக்கிய இந்த ஜமாஅத்தில் அதிலும் அவரது அடிமைகளாக நிர்வாகிகள் இருக்கையில் எப்படி நடவடிக்கை எடுக்கப்படும்?
நாங்கள் பீஜேவின் அடிமைகளா அல்லது எங்களை படைத்தவனுக்கு அடிமைகளா என்பதை மறுமையில் பார்த்துக் கொள்ளாலாம்...
இங்க பிரச்ச்னை என்னனா, பாதிக்கப்பட்டவள் என நீங்கள் சித்தரிக்கும் பெண் புகார் கொடுக்கல, அவளின் குடும்பமும் முன் வரல, பார்த்த சாட்சிகளும் இல்ல, நீ வெளியிட்ட ஆடியோவில் குரல் மட்டும் தான் ஆதாரம் என்றால் எந்த நல்ல பிறப்பையும் விபச்சார பிறப்பாக ஆக்குவது இன்றைய காலத்தில் கடினமா? இதில் வெளியிட்ட நீங்களோ அல்லது எவருமோ தப்பிக்க முடியுமா?
சரி கேள்விக்கு வறேன்,
பீஜே இது போல் குற்றச்சாட்டில் ஈடுப்பட்டார் என்று இஸ்லாம் நிரூபிக்க சொன்ன விதத்தில் நிரூபித்தால், இதே பீஜேவை தூக்கியெறிய நாங்கள் தயார்.
அது முடியாதுனு நினைக்கிற, எங்களுக்கு முடியும்..
என்ன அயோக்கியத்தனம் செஞ்சாலும் உள்ளுக்குள்ளேயே கமுக்கமா அமுக்கி இயக்கம் நடத்துறவங்களுக்கு வேணும்னா இப்படி நடக்குறது கஷ்டம். ஆனால் நாங்கள் இந்த இயக்கத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்ந்த தலைவர், பொதுச் செயலாளர்களைக் கூட குற்றம் நிரூபனமானால் விட்டுவைத்தது இல்லை. எனவே எங்களுக்கு இது ஒரு பெரிய மேட்டரே இல்லை.
2. பீஜே சமுதாயத் தலைவர் என்ற போர்வையில் ஒளிந்து அக்கிரமம் செய்யும் போது அடையாளப்படுத்துவது சரி தானே?
பீஜேவின் மானத்தோடு விளையாட இததானடா வயித்துபுள்ளகாரி வாந்தி எடுத்த மாதிரி சொல்லிக்குட்டே இருக்கீங்க..
முஸ்லிமின் மானம் புனிதமானது என்ற கோட்பாட்டை மாநபியிடமிருந்து படிக்கலனா கூட, மார்க்ஸ் அந்தோனியிடம் இருந்து கூடவா படிக்கல.
நீங்க விளையாடுற இந்த விளையாட்டுக்கு மறுமையில் எதுவும் மிஞ்சுமான்னு தெரியல, அது சரி அத தெரிஞ்சா நீங்க ஏன்டா ஏகத்துவத்தை எதிர்க்க போறீங்க..
சரி உன் வாதப்படி தலைவனா இருக்குறவன் தப்பு செஞ்சா அம்பலப்படுத்துவனு சொன்னா………
தமிழகத்துல இருக்கிற இயக்கத் தலைவரெல்லாம் யோக்கியனுங்கனு சொல்லவறீங்களாடா?
நான் ஒவ்வொரு தலைவனா பட்டியல் போட்டு பேச ஆரம்பிச்சா சந்தனம் மணக்காது சாக்கடை தான்.......
அதனால பீஜேவை வீழ்த்த வெறி கொண்டு திரிகிற உங்களுக்கு இது தான் காரணம்னு சொன்னா, உங்க பொண்டாட்டி புள்ளைங்க கூட நம்பமாட்டாங்களே, அப்புறம் எப்படிடா இந்த இயக்கதுல உள்ளவன் நம்புவான்..
இதுக்கு முன்னாடி உண்மைய எப்பவாச்சும் பேசி இப்போ இதை சொன்னா, இந்த ஜமாஅத்துல உள்ளவர்களும் கூட இந்த ஆடியோவ நம்பியிருப்பாங்க..
நீங்க எடுத்த வாந்தியெல்லாம் நியாபகம் வரலனா திரும்பி பாருங்கடா..
யூத கைக்கூலி, மொசாத்துக்கு உளவு சொல்றாரு, சவுதியில இருந்து கோடி கோடியா கொட்டுது, காட்டிக்குடுத்தாரு குர்ஆன மறுத்தாரு, ஹதீஸ மறித்தாரு, முஃதஸிலா, காரிஜியானு மாசத்துக்கு ஒன்னு சொன்னா, அதுவும் சொல்ற எவனுக்காவது நல்லவன்ற ரேகை முகத்துல ஓடுதா அதுவும் இல்ல, அப்புறம் இது தான் ஆதாரம்னா எப்படிடா நம்புவாங்க..
3. பீஜே ஒரு விஷ கிருமி எனவே அவரை எதிர்ப்பது இஸ்லாத்தின் ஆறாவது கடமை தானே?
அப்படியா..
பீஜேவுக்கு தமிழக்கத்துல இருக்குற செல்வாக்கு என்னனு ஆடியோவ தயாரிச்சவன்ல இருந்து பரப்புறவன் வரைக்கும் எல்லாருக்கும் தெரியும்
இவ்வளவு செல்வாக்கு பீஜேவுக்கு இருந்தும், அவருக்கு எதிரா பேசுறவனுக்கோ, எழுதுறவனுக்கோ, வீடியோல அப்பப்ப வந்து நானும் ரவுடிதானு படங்காட்டுறவனுக்கோ, இல்ல எதிர்த்து நிக்குற வேற எந்த தலைவனுக்கோ துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடல, இதை இப்பவாச்சும் யோசிங்கடா
ஒரு வேளை நீங்க சொல்ற மாதிரி விஷக்கிருமியா பீஜே இருந்து, அவரால உருவாக்கப்பட்டவங்களும் விஷக்கிருமிகளா இருந்துருந்தா, பாதுகாப்பு பீஜேவுக்கு தேவைப்படிருக்காது, -----------------
ஒவ்வொரு ஊர்லயும் ஏகத்துவத்த சொல்லி அடிவாங்கும் போது, அடி வாங்குனா தான் இந்த மார்க்கம் வளரும்னு பீஜே எடுத்த பாடம் தப்போனு இப்போ நினைக்க தோனுது...
முஹம்மது யூசுஃப்
பொதுச் செயலாளராக அல்ல பொது மக்களில் ஒருவனாக...