திங்கள், 28 ஆகஸ்ட், 2017

தேசம் காப்போம், பாஜகவை விரட்டுவோம் என கோஷம்! - ​பீகாரில் எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி! August 27, 2017

தேசம் காப்போம், பாஜகவை விரட்டுவோம் என கோஷம்! - ​பீகாரில் எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி!



பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலகக்கோரி தலைநகர் பாட்னாவில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு தலைமையில் எதிர்க்கட்சிகள் சார்பில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

பேரணியையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத், சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் சரத் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜா உள்ளிட்ட சுமார் 15-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் எச்சரிக்கையை மீறி சரத் யாதவ் பங்கேற்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணியை முறித்துக்கொண்டு, பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியமைத்தார். இந்நிலையில், அவர் மீது பல்வேறு ஊழல் புகார் தெரிவித்த லாலு பிரசாத் யாதவ், எதிர்க்கட்சிகளை திரட்டி இன்று பேரணி நடத்தியுள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய லாலு, துணை முத்லவராக இருந்த தனது மகன் தேஜஸ்வி யாதவின் அரசியல் வளர்ச்சியை கண்டு, முதல்வர் நிதிஷ்குமார் பொறாமையுடன் செயல்பட்டதாக குற்றம்சாட்டினார்.