திங்கள், 28 ஆகஸ்ட், 2017

27 வருடங்கள் போராடி தனிநபராக குளம் வெட்டிய ஹீரோ! August 28, 2017

27 வருடங்கள் போராடி தனிநபராக குளம் வெட்டிய ஹீரோ!


சத்தீஸ்கர் மாவட்டத்தில் உள்ள கோரியா மாவட்டத்தில் உள்ள சாஜா பகத் என்னும் கிராமத்தில் பல ஆண்டுகளாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்துள்ளது. ஆனால் இந்த பிரச்சனையை தீர்க்க அரசாங்கமோ, கிராம மக்களோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

ஆனால் கிராம மக்களும், கால்நடைகளும் குடிக்க நீர் இல்லாமல் தவிப்பதை பார்க்க முடியாத 15 வயது நிரம்பிய ஷ்யாம் லால் என்னும் இளைஞர் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கொண்டுவர முடிவு செய்தார். இதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்து அதில் குளம் வெட்ட முடிவு செய்தார். ஷ்யாம் குளம் வெட்டுவதற்காக ஒரு மண்வெட்டி மட்டுமே பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முதலில் ஷ்யாம் குளம் வெட்டத் தொடங்கியபோது கிராம மக்கள் அனைவரும் அவரை கேலி செய்தனர். ஆனால் கேலிகளையும் கிண்டல்களையும் பொருட்படுத்தாத ஷ்யாம் விடா முயற்சியோடு 27 ஆண்டுகள் போராடி 15 அடி ஆழம் கொண்ட குளத்தை ஒரு ஏக்கர் பரப்பளவில் உருவாக்கி சாதனை படைத்துள்ளார். 

“இந்த குளத்தை வெட்டுவதற்கு யாரும் எனக்கு உதவ முன்வரவில்ல்லை ஆனாலும் இதை கிராம மக்களின் நலனுக்காகவும் கால்நடைகளின் நலனுக்காவும் தான் செய்தேன்” என ஷ்யாம் மகிழ்வுடன் கூறுகிறார்.

இது குறித்து மகேந்திரஹரா தொகுதியின் எம்.எல்.ஏ. கூறும்போது, தனிநபராக குளம் வெட்டி கிராம மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்ட ஷயாம் லால்க்கு 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறினார். 

மேலும் ஷ்யாம் வெட்டிய குளத்தை பார்வையிட்ட கிராம மக்கள் ஷ்யாமை ஒரு ஹீரோ என்றும் மக்களின் பிரச்சனையை தீர்க்க வந்த மீட்பர் என்றும் புகழ்கின்றனர். 

Related Posts: