செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

மும்பையை மிரட்டும் கனமழை: ஒரு மணி நேரத்தில் 70 மிமீ மழை பொழிவு..!! August 29, 2017

​மும்பையை மிரட்டும் கனமழை: ஒரு மணி நேரத்தில் 70 மிமீ மழை பொழிவு..!!


மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இன்று காலை முதலே கனமழை  பெய்து வருவதால், முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இரண்டு மற்றும் 4 சக்கர வாகனங்கள் மழைநீருக்கு இடையே ஊர்ந்து செல்கின்றன. 

மும்பை புறநகர் ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பந்த்ரா உள்ளிட்ட மும்பையின் முக்கிய பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இதனிடையே, கனமழை காரணமாக மும்பையில் உள்ள KEM மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அங்கிருந்த நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றும் நடவடிக்கையை மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. 

காலை 8.30 மணி முதல் தற்போது வரைக்கும் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது என்றும், கடந்த ஒரு மணி நேரத்தில் மட்டுமே 70மிமீ மழை பெய்ததாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை காரணமாக மேற்கில் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்பான உதவிக்கு 1916 
என்ற எண்ணில் தொடர்ப்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.