வியாழன், 31 ஆகஸ்ட், 2017

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் சாதித்தது இவ்வளவுதானா? அதிர்ச்சி புள்ளி விவரங்கள்! August 30, 2017

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் சாதித்தது இவ்வளவுதானா? அதிர்ச்சி புள்ளி விவரங்கள்!


கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி நாட்டில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது முதல் இந்திய பணப்புழக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்களை புள்ளி விவரங்களுடன் கீழே காணலாம்...

* புழக்கத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டு அளவு 86%.

* பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட மொத்த ரூபாயின் மதிப்பு 15.8 லட்சம் கோடி.

* பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகளின் மொத்த எண்ணிக்கை 2400 கோடி நோட்டுகள் (2400 crore pieces of currency)

* பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது 66 முறை விதிகள் மாற்றி மாற்றி அறிவிக்கப்பட்டது.

* 11. 12. 2016 அறிக்கையின் படி புதிய நோட்டுக்களாக அரசு மீண்டும் புழக்கத்தில் விட்ட பண மதிப்பு 5.48 லட்சம் கோடி. (அதன் பிறகு அறிக்கை தரவில்லை)

* 19.12.2016 அறிக்கையின் படி பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு 12.5 லட்சம் கோடி பணம் மீண்டும் வங்கியில் செலுத்தப்பட்டுவிட்டது. (அதன் பிறகு அறிக்கை தரவில்லை)

* ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி இந்தியாவில் உள்ள போலி நோட்டுக்களின் மதிப்பு சுமார் 400 கோடி ரூபாய்

* பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு சுமார் 36 லட்சம் வங்கிக்கணக்குகளில் 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் டெபாசிட் செய்யப்பட்டது.

* பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது 1000% அளவில் தடாலடியாக உயர்ந்த ‘ரொக்கமில்லா' பரிவர்த்தனை கடந்த பிப்ரவரி மாதம் வீழ்ச்சியடைந்தது. கடந்த பிப்ரவரியில் அரசு அளித்த அறிக்கையின் படி அரசின் திட்டமிடலைவிட பணப்பரிவர்த்தனை 60% குறைவாகவே நடக்கிறது.

* பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகான 10 மாதங்களில், 11.23 கோடி ரூபாய் போலி நோட்டுகள் மட்டுமே அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

* பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு சோதிக்கப்பட்ட வங்கிக்கணக்குகளில் கணக்கு தாக்கல் செய்த 9.72 லட்சம் கணக்குகளில் செய்த முதல் ஆய்வில் 5.56 லட்சம் கோடி கணக்குகள் சுத்தமானவை என முடிவு செய்யப்பட்டது.

* பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் மொத்தம் 99 சதவீத நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.