வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

​200 ரூபாய் நோட்டில் இருக்கும் அந்த சின்னம் என்னது? August 25, 2017

​200 ரூபாய் நோட்டில் இருக்கும் அந்த சின்னம் என்னது?



இந்தியாவில் முதன்முறையாக 200 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 8, 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு மிகக்கடுமையான பணப்புழக்கத் தட்டுப்பாடு நிலவியது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு 10 மாதங்கள் ஆகியும் கூட இந்த பணத்தட்டுப்பாடு நீங்கவில்லை என்று அரசு நினைக்கிறது. இதன் காரணமாக, 200 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.

இதற்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்ட 500 ரூபாய் நோட்டில் டெல்லி செங்கோட்டையும், 2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் விண்கலமும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், 200 ரூபாய் நோட்டில் மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் உள்ள சாஞ்சி ஸ்தூபிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த  ஸ்தூபிகள் மற்றும் குவிமாடங்கள் கி.மு 3,2,1 ஆகிய நூற்றாண்டுகளைச் சேர்ந்தவையாகும். கி.மு 3ம் நூற்றாண்டில் அசோக சக்கரவர்த்தி இந்த ஸ்தூப மாடத்தில் உள்ள ஆதார தூணை நிறுவினார். பின்னர், சுங்கர்கள், சதவாகனர்கள் ஆட்சிக்காலத்தில் முறையே குவிமாடங்கள், சிற்ப மேம்பாடுகள், குடைவரைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் புராதன பாரம்பரியச்சின்னங்களில் ஒன்றாக போற்றப்படும் இந்த சாஞ்சி ஸ்தூபிகள் தான் 200 ரூபாய் நோட்டுக்களில் இடம் பெற்றுள்ளது.