வியாழன், 31 ஆகஸ்ட், 2017

காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பரபரப்பு குற்றச்சாட்டு August 31, 2017

காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பரபரப்பு குற்றச்சாட்டு


தேர்ந்தெடுக்கப்படாமலே தமிழகத்தை பாஜக ஆட்சி செய்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் குற்றச்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற உத்தரவால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்றும், இந்த அரசு இருக்கும் ஒவ்வொரு நாளும் தமிழகத்திற்கு பேரிழப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். 

சட்டப் பேரவையை உடனடியாகக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் பீட்டர் அல்போன்ஸ் வலியுறுத்தினார்.

Related Posts: