திங்கள், 28 ஆகஸ்ட், 2017

டோக்லாமிலிருந்து படைகளைத் திரும்பப் பெற இருநாடுகளும் ஒப்புதல்! August 28, 2017

டோக்லாமிலிருந்து படைகளைத் திரும்பப் பெற இருநாடுகளும் ஒப்புதல்!


டோக்லாம் விவகாரத்தில் சீனாவுடன் நடத்தப்பட்ட ஆலோசனையை தொடர்ந்து, அப்பகுதியில் இருந்து இரு தரப்பும் ராணுவத்தை திரும்பப் பெற ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டோக்லாம் விவகாரத்தைக் கையாளும் வெளியுறவுத்துறை அமைச்சகக் குழு இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியா, சீனா இடையே தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாகவும், அப்போது இரு தரப்பும் தங்கள் தரப்புக் கருத்துக்களை தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Related Posts: