ஜி.எஸ்.டி வரி வசூல்முறை கடந்த ஜூலை 1ம் தேதி அமல்படுத்தப்பட்டது. நாடுமுழுவதும் 87 லட்சம் ஜி.எஸ்.டி இணையத்தில் பதிவுசெய்துள்ளனர். இவர்களில் 40% பேர் வரிவருவாய் கணக்கு பதிவுசெய்துள்ளனர். இவர்கள் மூலமாக சுமார் 65,000 கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இது அரசு எதிர்பார்த்த அளவைவிட மிகவும் குறைவாகும். மத்திய பாஜக அரசு நடப்பு நிதியாண்டில் மட்டும் 9.26 லட்சம் கோடி வரிவசூல் செய்ய திட்டமிட்டிருந்தது. இதன் அடிப்படையில், ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 1.625 லட்சம் கோடி ரூபாய் வரி வசூல் செய்திருக்க வேண்டும். ஆனால், 65,000 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகை என்பது ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்படும் முதல் 5 ஆண்டுகளுக்கு மாநில அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு திருப்பிக்கொடுக்கும் தொகை, மத்திய - மாநில பங்கீடு என எல்லாவற்றையும் உள்ளடக்கியது.