புதன், 30 ஆகஸ்ட், 2017

இந்தோ - ஜப்பான் உறவை வலுப்படுத்தி தமிழருக்கு ஜப்பான் அரசு விருது வழங்கி கவுரவம்..!! August 29, 2017



இந்தோ - ஜப்பான் உறவை வலுப்படுத்தியதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் குமாருக்கு ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் விருது வழங்கி கவுரவித்துள்ளது. 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தோ - ஜப்பான் உறவை வலுப்படுத்தியதற்காக தொழிலதிபர் குமாருக்கு இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் செய்ஜி பாபா விருது வழங்கி கவுரவித்தார். 

இந்நிகழ்ச்சியில் பேசிய செய்ஜி பாபா, தொழிலதிபர் குமார், ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு முதலீடுகளைக் கொண்டு வர பெரிதும் பாடுபட்டதாக தெரிவித்தார்.

கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த 67 வயதான குமார், இந்தோ - ஜப்பான் வர்த்தக தொழில் கூட்டமைப்பின் தலைவராக கடந்த 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார். இந்திய தொழில் கூட்டமைப்பின் முன்னாள் தலைவராகவும் தொழிலதிபர் குமார் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.