வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

177 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலத்தைப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க கோரிக்கை August 25, 2017

177 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலத்தைப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க கோரிக்கை


திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் 177 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலத்தைப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்துப் பராமரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சிக்கும் அம்பாசமுத்திரத்துக்கும் இடையே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே 1840ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் இப்போது பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டுள்ளது. 170 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் கம்பீரமாக நிற்கும் அந்தப் பாலம் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன் இந்தப் பாலத்தின் மேற்குப் பக்கத்தில் புதிய பாலம் கட்டப்பட்டது.

புதிய பாலத்தைத் திறந்தபின் பழைய பாலம் போக்குவரத்தின்றிக் கைவிடப்பட்டது.  தாமிரபரணி ஆற்றின் பழைமையான பாலமாக வரலாற்றில் இடம்பெற்றுள்ள இந்தப் பாலத்தைப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.