புதன், 30 ஆகஸ்ட், 2017

​​உ.பி-யில் மீண்டும் ஒரு மருத்துவ பயங்கரம் - 48 மணிநேரத்தில் 42 குழந்தைகள் மரணம்! August 30, 2017

​​உ.பி-யில் மீண்டும் ஒரு மருத்துவ பயங்கரம் - 48 மணிநேரத்தில் 42 குழந்தைகள் மரணம்!



உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர், பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 48 மணிநேரத்தில் 42 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கோரக்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே வாரத்தில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 48 மணிநேரத்தில் மேலும் 42 குழந்தைகள் பரிதாபமான முறையில் பலியாகி உள்ளதாக தெரிகிறது.

இதில் 7 குழந்தைகள் மூளை அலர்ஜி காரணமாகவும் மற்றவர்கள் மற்ற காரணங்களுக்காகவும் பலியாகியுள்ளதாக கோரக்பூர் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் பி.கே.சிங் தெரிவித்துள்ளார். கோரக்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து பச்சிளம் குழந்தைகள் பலியாகி வருவது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Related Posts: