15 வயது சிறுமியை வன்புணர்ந்து வழக்கில் குர்மீத் ராம் ரகீம் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவருக்கு என்ன தண்டனை என்ன என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், தண்டனை உறுதிசெய்யப்பட்ட பிறகு ஹரியானா, பஞ்சாப், டெல்லி பகுதிகளில் மிகப்பயங்கரமான கலவரங்கள் நடைபெற்று வருகிறது.
இதுவரை 30 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 300 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கலவரங்கள் காரணமாக 250 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. உச்சக்கட்ட பதற்றம் காரணமாக டெல்லி, ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களில் உள்ள 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீக்கிய சாமியார் குர்மித் ராம் ரகீம் மீது ஒருவர் மட்டுமே பாலியல் வழக்கு குற்றச்சாட்டு கூறிய நிலையில் கோடிக்கணக்கான மக்கள் கூறுவதை ஏன் கேட்கவில்லை என பாரதிய ஜனதா கட்சியின் எம்பி சாக்சி மகாராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் உத்தர பிரதேசம் உன்னாவ் பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தற்போது நிகழ்ந்துள்ள வன்முறைக்கு தேரா சச்சா அமைப்பை மட்டும் பொறுப்பேற்க வேண்டும் என்பதை காட்டிலும், இதில் நீதிமன்றத்திற்கும் பொறுப்பு உள்ளது எனவும் சாக்சி மகாராஜ் கருத்து தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநில முதல்வர் இது குறித்து அதிகம் பேச வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.