செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

காட்டு மிருகத்துக்கு கருணைக்கு தகுதியில்லை - பலாத்கார சாமியார் குறித்து நீதிபதிகள் விமர்சனம்! August 29, 2017

காட்டு மிருகத்துக்கு கருணைக்கு தகுதியில்லை - பலாத்கார சாமியார் குறித்து நீதிபதிகள் விமர்சனம்!


பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஹரியானா மாநில சிக்கிய சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்க்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத் அடைக்கப்பட்டிருந்த ரோதக் சிறைக்குச் சென்று தீர்ப்பளித்த நீதிபதி, 2 பாலியல் வழக்கில் தலா 10 ஆண்டுகள் என மொத்தம் 20 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இரண்டு வழக்கிலும் சிறை தண்டனையுடன் ஒவ்வொரு வழக்கிலும் தனித்தனியாக  15 லட்சம் என மொத்தம் 30 லட்சம் ரூபாய் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதில், பாதிக்கப்பட்ட பெண்கள் இருவருக்கும் தலா 14 லட்சம் கொடுக்க வேண்டும். 2 லட்ச ரூபாய் மாநிலத்துக்கு கட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று மாநிலங்களில் கலவரங்களை ஏற்படுத்திய இவ்வழக்கில் நீதிபதி ஜக்தீப் சிங் பலாத்கார சாமியாரை கடுமையாக விமர்சித்தார்.

“தான் பிறருக்கு சொல்லுகின்றன ஒழுக்கங்களையே கடைபிடிக்காத இந்த சாமியார், காட்டு மிருகத்தைப் போல நடந்துகொண்டுள்ளார், அவர் கருணை காட்டப்படுவதற்கு தகுதியற்றவர்” என கடுமையாக விமர்சித்தார். மேலும், பழம்பெரும் நாட்டின் பாரம்பரியத்தை குர்மீத் சேதப்படுத்திவிட்டதாகவும் நீதிபதி விமர்சித்தார்.

”குர்மீத்தை பாதிக்கப்பட்ட பெண்கள் கடவுள் போல பார்த்துள்ளனர். ஆனால், குற்றவாளி அவர்களை பாலியல் தொந்தரவால் கண்மூடித்தனமான பக்தர்களை உடைத்துள்ளார்” என்றும் நீதிபதி விமர்சித்தார். மேலும், விதிக்கப்பட்டிருக்கும் அபராதத்தொகையை செலுத்தும் அளவிற்கு குர்மீத்திடம் நிறைய பண வசதி இருக்கிறது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.