செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

இந்தியாவின் வெற்றி”: சீன அரசை வறுத்தெடுக்கும் சீன சமூக வலைத்தளவாசிகள்..!! August 29, 2017

​“இந்தியாவின் வெற்றி”: சீன அரசை வறுத்தெடுக்கும் சீன சமூக வலைத்தளவாசிகள்..!!


டோக்லாம் விவகாரத்தில் இந்தியாவே வென்றதாகக் கூறி சீன அரசாங்கத்தை சொந்த நாட்டு சமூக வலைத்தளவாசிகளே வறுத்தெடுத்து வருகின்றனர்.

இந்தியா சீனா பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து டோக்லாம் பகுதியில் இருந்து படைகளைத் திரும்பப் பெற இரு அரசுகளும் நேற்று ஒப்புதல் அளித்தன.

கடந்த இரு மாதங்களாக நீடித்து வந்த இந்த விவகாரம் நாளடைவில் மோசமடைந்ததையடுத்து போர் மூளும் என்ற பதற்றம் நிலவி வந்தது.

இந்நிலையில் பேச்சுவார்த்தையில் மூலம் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வந்தது மத்திய அரசு.  

டோக்லாம் பகுதியில் இந்திய ராணுவம் அத்துமீறி நுழைந்ததாகக்கூறிய நிலையில், மண்ணிப்பு கோராமல் படைகளை திரும்பப்பெற சீன அரசு சம்மதித்துவிட்டது இது இந்திய அரசின் வெற்றியே, என சீன அரசைக் கண்டித்து சமூக வலைத்தளங்களில் அந்நாட்டு சமூக வலைத்தளவாசிகளே அரசுக்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக், டிவிட்டர் போன்று ‘Weibo’ என்ற சமூக வலைத்தளத்தையே சீன மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் சீன அரசை கண்டிக்கும் விதமாக பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.



சீனப்பகுதிக்குள் நுழைவது அவ்வளவு எளிதாகிப்போனதா என்ற அடிப்படையிலும், இந்தியாவிற்கு தகுந்த பதிலடி கொடுக்காமலே சீன அரசாங்கம் இந்தப் பிரச்சனையை முடித்து விட்டது எனவும் ஆக்ரோஷமான கருத்துகள் பகிர்ந்து வருகின்றனர் சீனர்கள்.

டோக்லாம் விவகாரத்தில் வல்லரசு நாடாக காட்டிக்கொள்ளும் சீன அரசாங்கத்தை பணியச் செய்துவிட்டது இந்திய அரசாங்கம் என்றும் கடந்த இரண்டு மாதங்களாக செய்தி சேனல்களில் புயலென விவாதிக்கப்பட்டு வந்த ஒரு விவகாரம் மிகவும் மலிவான முறையில் முற்றுப்பெற்றுள்ளது என்றும் சமூல வலைத்தளங்களில் தங்கள் சொந்த நாட்டின் அரசாங்கத்தை சீனர்கள் விமர்சித்து வருகின்றனர்.