புதன், 30 ஆகஸ்ட், 2017

சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் மீது நித்யானந்தா சீடர்கள் புகார்! August 29, 2017


சமூக வலைதளத்தில் நித்யானந்தாவை தரக்குறைவான வார்த்தைகளால் பதிவிட்டு அவமானப்படுத்திய சமூக செயற்பாட்டளர் பியூஸ் மானுஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நித்தியானந்தா சீடர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் சமூக ஊடகங்களில் சாமியார் கும்ரீத் ராம் ரஹிம்சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாகவும் நித்தியானந்தா மீதுள்ள  பாலியல் புகார் தொடர்பாகவும் கடந்த 23ம் தேதி பதிவிட்டிருந்தார்.

புகைப்படத்தில் இருந்த பெண் சீடர்களான கோவையை சேர்ந்த மா நித்திய மகேஷ்வர நந்தா சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். நித்தியானந்தாவுடன் தமது புகைப்படத்தை இணைத்து தரக்குறைவான வார்த்தைகளால் பியூஸ் மானுஷ் பதிவிட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக மா நித்ய மகேஷ்வர நந்தா கூறினார்

Related Posts: