புதன், 30 ஆகஸ்ட், 2017

பசிபிக் கடலை நோக்கி வடகொரியா ஏவுகணை வீச்சு! August 29, 2017

பசிபிக் கடலை நோக்கி வடகொரியா ஏவுகணை வீச்சு!


ஜப்பான் வான் எல்லை வழியாக வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது முன்னெப்போதும் இல்லாத போர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜப்பான் கண்டனம் தெரிவித்துள்ளது. 

அண்மைக் காலங்களில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கொள்கைகளுக்கு முரணமாக அணு ஆயுதங்கள் சோதனையில் வடகொரியா ஈடுபட்டுவருகிறது. இதனால் அந்நாட்டுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்கா மீது தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு ராணுவ நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக வடகொரியா தொடர்ந்து மிரட்டல் விடுத்துவருகிறது. 

இந்நிலையில் இன்று அதிகாலை வடகொரியா ராணுவம் ஏவிய ஏவுகணை ஒன்று ஜப்பான் நாட்டின் வான் எல்லையைக் கடந்து சென்று கடலில் விழுந்தது. நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள Hokkaido தீவைக் கடந்து சென்ற அந்த ஏவுகணை பின்னர் கடலுக்குள் விழுந்ததாக தெரியவருகிறது. வடகொரியாவின் இந்த அத்துமீறலுக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் ஏவுகணை ஜப்பான் நாட்டைக் கடந்து பசிபிக் கடலில் விழுந்துள்ளது. வடகொரியாவின் இந்த அத்துமீறலுக்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.