சனி, 5 ஆகஸ்ட், 2017

பண மதிப்பிழப்புக்கு பிறகு இந்தியாவின் 20 பணக்காரர்களின் சொத்து 3.20 லட்சம் கோடி உயர்வு! August 05, 2017

 பண மதிப்பிழப்புக்கு பிறகு இந்தியாவின் 20 பணக்காரர்களின் சொத்து 3.20 லட்சம் கோடி உயர்வு!



உலகப்புகழ்பெற்ற பொருளாதார பத்திரிக்கையான ப்ளூம்பெர்க் பத்திரிக்கை இந்தியாவின் ‘டாப் 20’ பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு பணமதிப்பிழப்புக்கு பிறகு சுமார் 3.20 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. இந்த 20 பேரில் 18 பேரின்  சொத்து மதிப்பு கடந்த 7 மாதங்களில் 6,400 கோடிக்கு மேல் கூடியுள்ளது. 

இதில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மட்டும் கடந்த 7 மாதங்களில் சுமார் 83.2 ஆயிரம் கோடி உயர்ந்துள்ளது. இதுதவிர, ரிலையன்ஸ் நிறுவனம் பல்வேறு தொழில்களின் பங்குகளாக 5.25 லட்சம் கோடி ரூபாய் உள்ளது.

அம்பானிக்கு அடுத்தபடியாக அதானி, விப்ரோ நிறுவன அதிபர் அஸீம் ப்ரேம்ஜி, சூப்பர் மார்க்கெட் அதிபர் ஆர்.கே.தமனி ஆகியோரின் சொத்து சராசரியாக 18,000 - 24,000 கோடி அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் சன் குழும அதிபர் கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு சுமார் 9,984 கோடி இந்த 7 மாதங்களில் மட்டும் அதிகரித்துள்ளது.



பட்டியல்:
தொழில் அதிபர்       மொத்த சொத்து             அதிகரித்தது (7மாதத்தில்)

முகேஷ் அம்பானி          2.31 லட்சம் கோடி              83,200 கோடி
லட்சுமி மிட்டல்             1.06 லட்சம் கோடி               13,952 கோடி
அசீம் ப்ரேம்ஜி                 1.01 லட்சம் கோடி               23,232 கோடி
பல்லோஞ்சி மிஸ்திரி     99 ஆயிரம் கோடி             12.352 கோடி
சிவ நாடார்                         85 ஆயிரம் கோடி              9,088 கோடி
திலிப் சங்வி                      72 ஆயிரம் கோடி               8,832 கோடி
உதய் கோடாக்                 65 ஆயிரம் கோடி              19,712 கோடி
குமார் பிர்லா                    58 ஆயிரம் கோடி              20,032 கோடி
சைரஸ் பூனவாலா         57 ஆயிரம் கோடி               6,528 கோடி
கௌதம் அதானி             56 ஆயிரம் கோடி              26,880 கோடி
விக்ரம் லால்                    44 ஆயிரம் கோடி             14,080 கோடி
பங்கஜ் பட்டேல்               42 ஆயிரம் கோடி             16,320 கோடி
பேணு கோபால்               41 ஆயிரம்கோடி                9,732 கோடி
ராதாகிருஷ்ணன் தமனி 34 ஆயிரம் கோடி            21,760 கோடி
மிக்கி ஜக்தியானி             33 ஆயிரம் கோடி              1,184 கோடி
இந்து ஜெய்ன்                    32 ஆயிரம் கோடி              6,316 கோடி
கே.பி.சிங்                            31 ஆயிரம் கோடி            12,352 கோடி
அஜய் பிராமல்                  31 ஆயிரம் கோடி            12,224 கோடி
பிரகாஷ் ஹிந்துஜா          31 ஆயிரம் கோடி             7,232 கோடி
அசோக் ஹிந்துஜா           31 ஆயிரம் கோடி             7,232 கோடி
ராகுல் பஜாஜ்                     28 ஆயிரம் கோடி             8,512 கோடி
கலாநிதி மாறன்                25 ஆயிரம் கோடி             9,984 கோடி