ராகுல் காந்தி கார் மீதான தாக்குதலை கண்டித்து, கோவில்பட்டியில் 200 அடி உயரம் கொண்ட டவரில் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில்பட்டி டி.எஸ்.பி.அலுவலகம் அருகேயுள்ள காவல்துறைக்கு சொந்தமான 200 அடி உயரம் கொண்ட டவரில் காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் அய்யலுச்சாமி என்பவர் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். குஜராத்தில் ராகுல் காந்தி கார் தாக்கப்பட்டதை கண்டித்தும், குஜராத் மாநில அரசை கலைக்க வலியுறுத்தியும், அவர் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து கோவில்பட்டி டி.எஸ்.பி. முருகவேல் மற்றும் தீயணைப்பு துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். இதனையடுத்து 4 மணி நேரம் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.