சனி, 5 ஆகஸ்ட், 2017

தண்ணீரில் குதிப்பதாக நினைத்து மது போதையில் 2,000 அடி பள்ளத்தாக்கில் குதித்த இளைஞர்கள்.. அதிர்ச்சி வீடியோ..!! August 05, 2017

​தண்ணீரில் குதிப்பதாக நினைத்து மது போதையில் 2,000 அடி பள்ளத்தாக்கில் குதித்த இளைஞர்கள்.. அதிர்ச்சி வீடியோ..!!


மகாராஷ்டிர மாநிலத்தில் சிந்துதுர்க் மாவட்டம் அம்போலி காட் வனப்பகுதிக்கு சுற்றுலா சென்ற நண்பர்கள் இரண்டு பேர், 2,000 அடி பள்ளத்தாக்கில் விழுந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஷோலாப்பூரில் இருந்து சுற்றுலா சென்ற 7 பேரில், இம்ரான் காடி (வயது 26), பிரதாப் ரதோடி (வயது 21) ஆகிய இரண்டு வாலிபர்களும் 2,000 அடி ஆழமுள்ள கவாலே சாத் பாய்ன்ட் பள்ளத்தாக்கின் மேல் பாலத்தில் நின்று கொண்டு மது அருந்தினர். 

பின்னர் மது போதையில் இருவரும் பாலத்தின் தடுப்பின் ஒருபுறமுள்ள நீரில் குதித்து விளையாடினர். ஆனால், சிறிது நேரத்தில் தடுப்புக் கம்பியின் மேலேறி தண்ணீரில் குதிப்பதாக நினைத்து, தடுப்புச் சுவருக்கு அப்பால் சுமார் 2 ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்தனர். 

இந்த சம்பவத்தை அந்த பகுதியில் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த காட்சி சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

இந்த சம்பவம் குறித்து அங்கு விரைந்து சென்ற போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 2 இளைஞர்களின் உடல்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அங்கு மழை பெய்துவருவதாலும், பனி மூட்டம் காரணமாகவும் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்வோர், மது குடித்துவிட்டு பாட்டில்களை காடுகளில் தூக்கி எரிந்துவிட்டு செல்வதால் இயற்கைக்கும் அது கேடு விளைவிக்கிறது, மேலும் போதையில் விபரீத செயல்களில் ஈடுபட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருவது வேதனையளிப்பதாக உள்ளது.