சனி, 5 ஆகஸ்ட், 2017

​அடுத்த குடியரசுத் துணைத் தலைவர் யார்? : இன்று இரவுக்குள் முடிவு அறிவிப்பு..!! August 05, 2017

​அடுத்த குடியரசுத் துணைத் தலைவர் யார்? : இன்று இரவுக்குள் முடிவு அறிவிப்பு..!!


பரபரப்பான சூழலில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. 

தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியின் பதவி காலம் வரும் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, புதிய குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. 

இதில் பாஜக கூட்டணி சார்பில் வெங்கய்யா நாயுடுவும், காங்கிரஸ் மற்றும் எதிர்க் கட்சிகளின் சார்பில் கோபாலகிருஷ்ண காந்தியும் போட்டியிடுகின்றனர். 

நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர். 

காலை 10 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. அதன் பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு இரவு 7 அளவில் முடிவு அறிவிக்கப்படுகிறது. 

தேர்தல் நடைமுறைகள்:
  • குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றுமே வாக்களிக்க தகுதி பெறுவார்கள்.
  • இந்த தேர்தலை பொறுத்த வரையில் 545 மக்களவை உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர். மேலும் 12 நியமன எம்.பிக்கள் உட்பட 245 மாநிலங்களை உறுப்பினர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 
  • பாஜக கூட்டணியை பொறுத்த வரையில் 337 மக்களவை உறுப்பினர்களும், 80 மாநிலங்களவை உறுப்பினர்களும் உள்ளனர்.
  • அது தவிர அதிமுக, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் 67 எம்.பிக்களும் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.  
  • மொத்தமாக பாஜக கூட்டணிக்கு 484 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்  வாக்குகள் பதிவான அன்றே எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.
  • குறைந்தபட்சம் 396 வாக்குகள் பெறுபவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும், குடியரசு துணைத்தலைவர் மாநிலங்களவையின் தலைவராக செயல்படுவார்.