திங்கள், 7 ஆகஸ்ட், 2017

அருண் ஜெட்லியின் குற்றச்சாட்டுக்கு பினராயி விஜயன் பதில்! August 07, 2017

அருண் ஜெட்லியின் குற்றச்சாட்டுக்கு பினராயி விஜயன் பதில்!


கேரள மாநிலத்தில் இடதுசாரிகள், இந்து இயக்கத்தினர் இடையிலான மோதலுக்கு ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலமே தீர்வு காண முடியும், என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெறுகிறது. அண்மையில் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினரும் பாஜகவினரும் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். ஜூலை 29-ம் தேதி ஆர்எஸ்எஸ் தொண்டர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி பார்த்து ஆறுதல் தெரிவித்தபோது, இடதுசாரிகளின் ஆட்சி நடைபெறும் போதெல்லாம் கேரளாவில் இந்து இயக்கத்தினருக்கு எதிரான வன்முறை தலைதூக்குவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். 

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், கேரள மாநிலத்துக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுவதை விட்டுவிட்டு, அனைத்துக் கட்சியினரும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம் வன்முறைக்குத் தீர்வுகான வேண்டும் எனக் குறிப்பிட்டார்.