ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையால் பொருட்களில் விலை குறையவில்லை என கேரளா, மேற்குவங்கம் மற்றும் பீகார் மாநிலங்கள் சார்பில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் வரி குறைக்கப்பட வேண்டிய பொருட்கள் தொடர்பாக பல்வேறு மாநிலங்கள் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் கிடைக்கும் பயன்களை மக்களுக்கு உணர்த்தும் விதமாக, 150 பொருட்களின் விலைப் பட்டியலை வெளியிட ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் பட்டியலை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் அதே தருணத்தில், அடுத்தடுத்து பல பொருட்களை பட்டியலில் சேர்க்கவும் திட்டமிடப்பட்டு வருவதாக தெரிகிறது.