செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

குடிமக்களை விமர்சிக்க பத்திரிக்கைகளுக்கு சிறப்பு உரிமை கிடையாது - நீதிமன்றம்! August 07, 2017


​குடிமக்களை விமர்சிக்க பத்திரிக்கைகளுக்கு சிறப்பு உரிமை கிடையாது - நீதிமன்றம்!



குடிமக்களை விமர்சிக்க பத்திரிக்கைகளுக்கு சிறப்பு உரிமை கிடையாது என்றும், சாதாரண குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் தான் நமது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ளது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மெர்கண்டைல் சமாச்சார் என்ற பத்திரிக்கையின் மீது தொடரப்பட்ட வழக்கில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு அப்பத்திரிக்கையில் வெளியான ஒரு கட்டுரையில் தன்னைப் பற்றிய கருத்துக்கள் என்னுடைய பெயருக்கு களங்கம் விளைத்துவிட்டது என்று பங்குச்சந்தை தரகர் ஒருவர் தொடுத்திருந்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள டெல்லி நீதிமன்றம், “ ஒரு பத்த்ரிக்கையாளருக்கு மக்களைச் சென்று சேருவதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. எனவே, தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டால் திருத்தமுடியாத களங்கம் ஒருவருக்கு ஏற்படக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கைத் தொடர்ந்த தரகர் மீது அவரது குடியிருப்பு வாசிகள் சங்கத் தலைவர் ஆக்கிரமிப்பு புகார் எழுப்பியிருந்தார். இந்த இரண்டையும் விசாரித்த நீதிமன்றம் புகார் அளித்த குடியிருப்பு வாசிகள் சங்கத்தலைவர் மற்றும் பத்திரிக்கையின் ஆசிரியர் இருவருக்கும் முறையே 20,000, 30,000 அபராதம் விதித்துள்ளது.