ஆந்திராவில் இளைஞர் ஒருவர் பாக்கெட்டில் வைத்திருந்த ஸியோமி ஸ்மார்ட் போன், வெடித்து சிதறிய சம்பவத்தில் உரிய இழப்பீடு வழங்குமாறு பாதிக்கப்பட்ட இளைஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ரவுலாபாலேம் பகுதியை சேர்ந்த பாவனா சூரியகிரண் என்பவர், கடந்த 20 நாட்களுக்கு முன்பு, ஆன் லைனில் இணைய சந்தையான பிலிப் கார்ட் மூலம் ஸியோமி ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ஸ்மார்ட் போன், திடீரென்று வெடித்து சிதறியுள்ளது. இதனால் கால் தொடையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் போனும் முழுமையாக தீயில் கருகி விட்டது. இந்த சம்பவத்திற்கும், உடலில் ஏற்பட்டுள்ள காயத்திற்கும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாவனா சூரியகிரண், சீன செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஸியோமிக்கு வேண்டுகோள் விடுத்த்துள்ளார்.