செவ்வாய், 12 டிசம்பர், 2017

​4 மாணவிகள் தற்கொலைள்: அரசு நிதியை வாங்க மறுப்பு - ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை! December 12, 2017

Image

வேலூர் அருகே 4 அரசு பள்ளி மாணவிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமான ஆசிரியர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமனிடம், பெற்றோர் கோரிக்கை மனு அளித்தனர். வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் பகுதியில் அரசு பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் சடலமாக மீட்க்கப்பட்ட சம்பவத்தில், தமிழக அரசு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது.

இந்த நிதியை வாங்க மறுத்த பெற்றோர், தங்கள் மகள்களின் இறப்புக்கு காரணமான ஆசியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமனிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

அப்போது தங்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கண்ணீர் மல்க அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து நியூஸ்- 7 தமிழுக்கு பேட்டி அளித்த பெற்றோர், தங்கள் மகள்களின் பள்ளிப் பைகள் காணாமல் போய் இருப்பதாகவும், பள்ளியில் வைக்கப்பட்டு இருந்த புகார் பெட்டி மறைக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். மேலும் தங்களது மகள்களின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை அரசின் நிதியை பெறப்போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.