செவ்வாய், 12 டிசம்பர், 2017

சிபிசிஎல் எண்ணெய் குழாய் வெடிப்பு - எண்ணெய் கசிவு - பொதுமக்கள் போராட்டம்! December 12, 2017

Image

நாகை அருகே சிபிசிஎல் நிறுவனம் பதித்த குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பல ஆயிரம் லிட்டர் கச்சா எண்ணெய் வெளியேறியது. இதனால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். 

நாகை மாவட்டம் நாகூர் சில்லடி தர்ஹா அருகே சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடட் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் திடீரென பெரிய அளவு உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரம் லிட்டர் கச்சா எண்ணெய் வெளியேறி குளம்போல் தேங்கியது. சிறு தீப்பொறி பட்டால் கூட பெரும்  விபத்து ஏற்படும் என்பதால் பெரும் பீதியடைந்த பொதுமக்கள்  உடைப்பை சரிசெய்யவும் வெளியேறிய கச்சா எண்ணையை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என சிபிசிஎல் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டினர். எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யாமல் அவசர கதியாக செப்டிக் டேங்க் லாரி கொண்டு கச்சா எண்ணையை வெளியேற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

பின்னர் அதிகாரிகளை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள் cpcl நிறுவனத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து காவல் துறையினர் போராட்டகாரகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து பொதுமக்கள் கலைந்து  சென்றனர்.