செவ்வாய், 12 டிசம்பர், 2017

டோக்லாம் பகுதியில் தனது ராணுவத்தை நிரந்தரமாக நிறுத்தும் சீனா! December 11, 2017

Image

டோக்லாம் பகுதியில் சீனா தனது ராணுவத்தை நிரந்தரமாக நிறுத்தத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் சிக்கிம்-பூடானுடன்  திபெத்  இணையும் டோக்லாமில், சாலை வசதி உட்பட பல்வேறு கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள சீனா முயன்றது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், சீன ராணுவத்தினர் 1,800 பேர் டோக்லாம் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் - மே மற்றும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் மட்டும் டோக்லாமில் கண்காணிப்புப் பணிகளை சீன ராணுவம் மேற்கொள்வது வழக்கம்.

இந்நிலையில், குளிர்காலமாக உள்ளபோதிலும், அங்கு தனது ராணுவத்தை சீனா களமிறக்கியுள்ளது. இந்தியாவுடனான மோதல் காரணமாகவே இந்த நடவடிக்கையை சீனா எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.