ரவணசமுத்திரத்திரம் கிராமத்தை சேர்ந்த 7ம் வகுப்பு படிக்கும் மாணவி மிஸ்பா நூருல் ஹாபீபா. இவர் யோகா போட்டியில் உலகளவில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். ஆனால், போட்டியில் கலந்துக் கொள்ள பணவசதியில்லாமல் தவித்துவரும் ஹாபீபா பண உதவி கேட்டு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ரவணசமுத்திரம் கிராமத்தில் வசிக்கும் முகமது நஸ்ரூதின் மளிகை கடையில் வேலை பார்த்துவருகிறார். இவரது மகள் 12 வயது மிஸ்பா நூருல் ஹாபீபா குற்றாலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகிறார்.
இப்பள்ளியில் நடைபெறும் யோகா பயிற்ச்சியில் சுமார் 6 வயது முதல் பயிற்ச்சி பெற்று வந்தார் மாவட்ட அளவில் நடக்கும் யோகா போட்டியில் கலந்துக் கொண்டு முதல் பரிசை வென்றுள்ளார்.
பின்பு மாநில அளவில் நடக்கும் போட்டியில் கலந்துக் கொண்டுள்ளார் அதிலும் மாணவி முதல் பரிசைவென்றுள்ளார் சிறுமி மிஸ்பா நூருல் ஹாபீபா. தொடர்ந்து யோகா போட்டிகளில் பல மாவட்டங்களில் மற்றும் மாநிலங்களில் கலந்துக் கொண்டு பல பரிசுகள் மெடல்கள் பதக்கங்கள் சான்றிதழ்கள் பெற்றுள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற 12 வயதிற்கான யோகா போட்டியில் கலந்துக் கொண்டு சிறப்பு நிலை போட்டியில் தங்கம் வென்றுள்ளார். இந்தியாவில் இருந்து சுமார் 27 பேர் கலந்துக் கொண்டதில் இவர் முதல் பரிசு வென்றது குறிப்பிடதக்கது.சிறுமி தாய்லாந்தில் தங்கம் வென்றதை தொடர்ந்து உலகளவில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மளிகை கடையில் வேலை பார்த்து குடும்பத்தை கவனித்து வரும் சிறுமி மிஸ்பா நூருல் ஹாபீபாவின் தந்தை சிறுமி தாய்லாந்து செல்வதற்கே கடன் வாங்கிதான் அனுப்பியுள்ளார். இத்தகைய வறுமையான சூழலில் சிறுமி ஹாபீபா காமன்வெல்த் போட்டியில் கலந்துக் கொள்ள போதுமான வசதியில்லாமல் தவித்து வருகிறார்.
சிறுமி படிக்கும் பள்ளியிலே அவருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதுவரை அவர் யோகா போட்டிக்கும் செல்லும் போது அதற்குரிய செலவுகளை சில தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பலர் உதவுயுடனே சென்றுள்ளார். தற்போது காமன்வெல்த் போட்டிக்கு அதிக அளவில் செலவுகள் உள்ளதால் அரசு சிறுமிக்கு தேவையான உதவிகளை செய்து காமன்வெல்த் போட்டியில் கலந்துக் கொண்டு இந்தியாவிற்கு மேலும் பெருமை சேர்க்க வழி செய்யுமாறு சிறுமி மிஸ்பாநூருல் ஹாபீபா மற்றும் அவர் குடும்பத்தினர் பள்ளி நிர்வாகம் சிறுமியின் மாஸ்டர் அனைவரும் சேர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயிற்சியாளர் குருகண்ணன் கூறும்போது, சிறுமி மாணவி 6 வயது முதல் யோகாவில் சாதனை புரிந்து வருகிறார். அவர் திறமைக்கு காமன்வெத் போட்டியில் இந்தியாவிற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக இருக்கும். அவருக்கு போதுமான பண வசதியில்லாத காரணத்தால் அவர் முயற்ச்சி விணாவிடகூடாது. மேலும் யோகா போட்டி மட்டுமின்றி ஸ்கேட்டிங்க் மற்றும் படிப்பிலும் சிறந்த மாணவியாக திகழ்கிறார். அதுமட்டுமின்றி மழை வேண்டி பிராத்தனை மத நல்லிணக்கம் மற்றும் படிப்பிலும் சிறந்து விளங்குகிறார். இதனால் அரசு சிறுமிக்கு உரிய உதவிகள் செய்து காமன்வெல்த் போட்டியில் கலந்துக் கொள்ள வாய்ப்பளிக்குமாறு கேட்டுக் கொள்கிறார்.