பகல் நேரங்களில் தொலைக்காட்சிகளில் ஆணுறை தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்ப தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது. வீட்டில் குடும்பத்துடன் அமர்ந்து தொலைக்காட்சிகளை பார்த்துக் கொண்டிருக்கும் போது, திடீரென அரைகுறை ஆடையுடன் வரக்கூடிய விளம்பரங்களால், அசௌகரியமான சூழல் உண்டாவதாக பலர் தெரிவித்திருந்தனர்.
பல நேரங்களில் இதுபோன்று ஒளிபரப்பப்படும் ஆணுறை தொடர்பான காட்சிகளால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும், அதனால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் ஆபாசமாக தோன்றக் கூடிய விளம்பரங்களை ஒளிபரப்புவதற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் புதிய நெறிமுறைகளை வகுத்துள்ளது.
அதன்படி காலை 6 மணி முதல் இரவு 10 வரை ஆணுறை விளம்பரத்தை காண்பிக்க கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.