பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடியாக பணபரிமாற்றம் நடைபெற்றதாக தகவல் வெளியானதை அடுத்து, அந்த வங்கியின் பங்குகள் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
இன்று நண்பகல் 1 மணி நிலவரப்படி பஞ்சாப் நேஷனல் வங்கி பங்குகளில் முதலீடு செய்தவர்கள் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாயை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 3-வது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் மோசடிகள் நடந்தது சமீபத்தில் தெரிய வந்தது.
இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் பல வாடிக்கையாளர்களுக்கு முறைகேடான முறையில் பணப் பரிமாற்றம் செயயப்பட்டதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே பணப் பரிவர்த்தனை செய்த வகையில் பல கோடி ரூபாய் அளவில் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது, மேலும் இது தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் 10 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன் எதிரொலியாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் சுமார் 12 ரூபாய் வரை சரிந்தன.