இந்திய தேர்தல் ஆணையத்தின் மூன்று தேர்தல் ஆணையர்களுக்குமான சம்பளம் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்துக்கு இணையாக உயர்த்தப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு என கடந்த ஜனவரி 25 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தற்போது தேர்தல் ஆணையர்களுக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கான சம்பள உயர்வின் அளவிலேயே சம்பள உயர்வு வழங்கப்படுகிறது என சம்பள உயர்வு குழுவால் முடிவு செய்துள்ளது.
இந்த சம்பள உயர்வு முறையே ஜனவரி 1 ,2016 முதல் முன்தேதியிட்டு வழங்கபடும் என அறிவிக்கபட்டுள்ளது. இதன் மூலம் முன்னாள் தேர்தல் ஆணையர்களும் பயன்பெறுவார்கள். சம்பள மற்றும் சேவை நிபந்தனைகள் அடிப்படையில் இந்த சம்பள உயர்வு வழங்கப்படுகிறது என தேர்தல் ஆணையர் மற்றும் வர்த்தக நடவடிக்கை சேவை பிரிவு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இதுவரை ரூ 90,000 சம்பளம் பெற்றவர்கள் இந்த ஆணை நடைமுறைக்கு வரும்போது இரு மடங்கு உயர்த்தபட்டு ரூ 2,50,000 சம்பளமாக பெறுவார்கள்.