பெரியகுளம்: கடத்தல் புகார் குறித்த பெற்றோரின் புகாரையடுத்து சாமியார் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுமியுடன் தங்கியிருந்த டாக்டரை அழைத்து காவல்துறையின் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த காந்தி-ஈஸ்வரி தம்பதியின் மகன் டாக்டர் மனோஜ், வேலைக்கு செல்லாமல் இருந்து வந்த அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் மாயமானார். அவரது சகோதரியின் மகளான 16 வயது சிறுமியும் காணவில்லை. பெற்றோர் விசாரித்து பார்த்ததில் இருவரையும் நித்தியானந்தாவின் ஆட்கள் மூளைச்சலவை செய்து அழைத்து சென்றது தெரியவந்தது.
இருவரையும் மீட்டுத்தரக்கோரி பெரியகுளம் வடக்கரை காவல் நிலையத்தில் பெற்றோர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்திற்கு சென்ற போலீசார் இருவரையும் அழைத்துக் கொண்டு பெரியகுளம் திரும்பியுள்ளனர். அவர்களை பெற்றோருடன் சேர்த்து வைக்க காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனிடையே மனோஜையும், சிறுமியையும் மீண்டும் ஆசிரமத்திற்கு அழைத்து செல்ல நித்தியானந்தாவின் ஆட்கள் முயன்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.