சர்தார் வல்லபாய் படேல் சிலை, அக்டோபர் 31-ஆம் தேதி திறக்கப்படும் என குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
நர்மதா மாவட்டத்தில், உலகிலேயே மிகப் பெரிய அளவில் 'ஒற்றுமைக்கான சிலை' என்ற பெயரில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை நிறுவப்பட உள்ளது. இதற்கான பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
மேலும், இச்சிலை சுமார் 182 மீட்டர் உயரத்துக்கு அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலைக்கு நிகராக அமைக்கப்படும் எனவும் இந்த சிலைக்காக 2 ஆயிரத்து 979 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் புகழைப் பறைசாற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ம் தேதி திறக்கப்பட உள்ளது.