வியாழன், 15 பிப்ரவரி, 2018

30 பேர் மீது 20 மணிநேரம் கொடூர தாக்குதல் நடத்திய வனத்துறை! February 15, 2018

Image

கொடைக்கானலில், சுற்றுலா சென்றவர்களை, வனத்துறையினர் கொடூரமாக தாக்கியதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மன்னவனூருக்கு கொடைக்கானல் தனியார் விடுதியில் இருந்து 8 பெண்கள் உட்பட 20 பேர் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் சாப்பிட்டு கொண்டிருந்தபோது அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்தில் சாப்பிடகூடாது எனக்கூறி லஞ்சம் தர வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. 

பிரச்சனையின் போது பெண்களை வீட்டிற்க்கு அனுப்பிய வனத்துறையினர் 11 ஆண்களை விசாரணைக்கு என அழைத்து சென்றதாகவும், தங்களுக்கு சொந்தமான வனத்துறை விடுதியில் வைத்து கிட்டதட்ட 20 மணி நேரத்துக்கும் மேலாக 30-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் கொடுரமாக தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

வனத்துறை பகுதிக்குள் அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் ரூ.75,000 அபராதமும் வாங்கியதாக கூறப்படுகிறது. வனத்துறையினரின் தாக்குதலில் காயமடைந்தவர்கள் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொடைக்கானலில் வனத்துறையினர் தாக்கியதில் காயமடைந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் தலைமை வனப்பாது காவலர் நாகநாதன் ,காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திரன் , மாவட்ட வனஅலுவலர் முருகன் ஆகியோர் வனசரகர மணிமாறன் , வனவர் டேவிட்ராஜ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.