அத்தியாயம் : 15 அல் ஹிஜ்ர்
அல் ஹிஜ்ர் – ஓர் ஊர்
மொத்த வசனங்கள் : 99
ஹிஜ்ர் என்பது ஸமூது சமுதாயத்தினர் வாழ்ந்த ஊரின் பெயர். இந்தச் சமுதாயத்தினரைப் பற்றி இந்த அத்தியாயத்தின் 80 முதல் 84 வரை உள்ள வசனங்களில் குறிப்பிடப்படுவதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
51. இப்ராஹீமின் விருந்தினர் பற்றியும் அவர்களுக்குக் கூறுவீராக!
52. அவர்கள், அவரிடம் சென்று ஸலாம்159 கூறினர். அதற்கு அவர் "நாம் உங்களைப் (பார்த்துப்) பயப்படுகிறோம்'' என்றார்.
53. "நீர் பயப்படாதீர்! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறினர்.
54. "எனக்கு முதுமை ஏற்பட்ட நிலையில் எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? எதனடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்?'' என்று அவர் கேட்டார்.
55. "உண்மையின் அடிப்படையிலேயே உமக்கு நற்செய்தி கூறுகிறோம். நம்பிக்கை இழந்தவராக நீர் ஆகிவிடாதீர்!'' என்று அவர்கள் கூறினர்.
56. "வழிகெட்டவர்களைத் தவிர யார் தமது இறைவனின் அருளில் நம்பிக்கை இழக்க முடியும்?''471 என்று அவர் கேட்டார்.
58. நாங்கள் குற்றம் புரிந்த கூட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளோம். (என்றனர்)