அத்தியாயம் : 15 அல் ஹிஜ்ர்
அல் ஹிஜ்ர் – ஓர் ஊர் - மொத்த வசனங்கள் : 99
ஹிஜ்ர் என்பது ஸமூது சமுதாயத்தினர் வாழ்ந்த ஊரின் பெயர். இந்தச் சமுதாயத்தினரைப் பற்றி இந்த அத்தியாயத்தின் 80 முதல் 84 வரை உள்ள வசனங்களில் குறிப்பிடப்படுவதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
81. நமது சான்றுகளை அவர்களுக்கு வழங்கினோம். அவர்கள் அதைப் புறக்கணித்தனர்.
82. அவர்கள் மலைகளை வீடுகளாகக் குடைந்து அச்சமற்று இருந்தனர்.
83. அதிகாலைப் பொழுதில் அவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது.
84. அவர்கள் செய்து கொண்டிருந்தவை அவர்களைக் காப்பாற்றவில்லை.
85. வானங்களையும்,507 பூமியையும், அவற்றுக்கு இடையே உள்ளவற்றையும் தக்க காரணத்துடனேயே படைத்துள்ளோம். யுகமுடிவு நேரம்1 வந்தே தீரும். எனவே அழகிய முறையில் அவர்களை அலட்சியப்படுத்துவீராக!
86. உமது இறைவன் நன்கு படைப்பவன்; அறிந்தவன்.
87. (முஹம்மதே!) திரும்பத் திரும்ப ஓதப்படும் (வசனங்கள்) ஏழையும் மகத்தான குர்ஆனையும் உமக்கு வழங்கினோம்.250
88. அவர்களில் பல்வேறு கூட்டத்தினர் அனுபவிப்பதற்காக நாம் வழங்கியுள்ளதை நோக்கி உமது கண்களை நீட்டாதீர்! அவர்களுக்காகக் கவலைப்படாதீர்! நம்பிக்கை கொண்டோரிடம் உமது சிறகைத் தாழ்த்துவீராக!251
89, 90, 91. சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுத்து, குர்ஆனை414 (முந்தைய வேதத்தை)க் கூறு போட்டோர் மீது நாம் (வேதனையை) இறக்கியது போலவே (இவர்களுக்கும் இறக்குவோம். இந்த இறைச்செய்தி குறித்து) "நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவன்'' என (முஹம்மதே!) கூறுவீராக!26
92, 93. உமது இறைவன் மீது ஆணையாக! அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவர்கள் அனைவரையும் விசாரிப்போம்.26
94. உமக்குக் கட்டளையிடப்பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!
95. கேலி செய்வோரை விட்டும் நாமே உம்மைக் காப்போம்.
96. அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுளைக் கற்பனை செய்கின்றனர். பின்னர் அறிந்து கொள்வார்கள்.
97. அவர்கள் (உம்மைப் பற்றிப்) பேசுவதன் காரணமாக உமது உள்ளம் கலங்குவதை அறிவோம்.
98. உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! ஸஜ்தா செய்வீராக!