கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் காடுகளின் பரப்பளவு கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் காடுகள் குறித்த 15வது அறிக்கையினை (ISFR) மத்திய சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ளது.
இதில் கடந்த ஆண்டு காடுகளில் பரப்பளவு 7,08,273 சதுர கிமீ ஆக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. முன்னதாக 2015ஆம் ஆண்டில் 7,01,495 சதுர கிமீ ஆக இருந்தது. 2015ஆம் ஆண்டு இருந்த காடுகளின் பரப்பளவைக் காட்டிலும் 6,778 சதுர கிமீ 2017ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவின் மொத்த பரப்பளவில் காடுகளின் பரப்பளவு 1% அதிகரித்து 21.54% ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறும்போது, சுற்றுச்சூழலை பேணிக்காக்கும் பாரிஸ் ஒப்பந்தத்தை இந்தியா தீவிரமாக அமல்படுத்தியதன் வாயிலாக காடுகள் பரப்பளவு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் காடுகளின் பரப்பளவு கணிசமாக அதிகரித்துள்ளது. அதே போல மிசோரம், நாகலாந்து, அருணாச்சல பிரதேசம், திரிபுரா மற்றும் மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் காடுகளின் பரப்பளவு கணிசமாக குறைந்துள்ளதாகவும் காடுகள் குறித்த அறிக்கையின் வாயிலாக தெரியவருகிறது.
ஆந்திரா (2,141 சதுர கிமீ), கர்நாடகா (1,101 சதுர கிமீ, கேரளா (1043 சதுர கிமீ) ஆகிய மாநிலங்கள் காடுகள் பரப்பளவு அதிகரித்துள்ள மாநிலங்கள் பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன.
நாட்டிலேயே அதிக காடுகள் பரப்பளவு கொண்டதாக மத்தியபிரதேசம் (77,414 சதுர கிமீ), அருணாச்சல பிரதேசம் (66,964 சதுர கிமீ), சட்டீஸ்கர் (55,547) மாநிலங்கள் முதல் 3 இடங்களை வகிக்கின்றன.
மேலும், மஹராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் 100 சதுர கிமீ அளவிற்கு நீர் நிலைகளின் பரப்பளவு அதிகரித்துள்ளதாகவும் இந்த அறிக்கையின் மூலமாக தெரியவந்துள்ளது.