செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

அதிக நேரம் கழிவறையில் அமர்ந்திருந்ததால் வெளியே வந்த மலக்குடல்! February 13, 2018

Image

சீனவை சேர்ந்த ஒருவர் கழிவறையில் அதிக நேரம் அமர்ந்திருந்ததால், அவருடைய மலக்குடல் வெளியே வந்து தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் இரவுநேரத்தில் கழிவறையில் இருக்கும்போது திடீரென்று தனது ஆசனவாயில் பெரிய கட்டி தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால் நள்ளிரவில் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் இது குறித்து கூறினார்.

உடனே அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அக்கட்டி போன்ற பொருள் மலக்குடல் என்றும் அது 16 செ.மீ சுற்றளவு உடையது என்றும் உறுதிசெய்தனர்.
இதனையடுத்து, அவரிடம் விசாரித்த பொழுது, நீண்ட நேரம் ஒரே நிலையில், கழிவறையில் அமர்ந்து, செல்போன் உபயோகித்தது தெரியவந்தது.

இம்மாதிரியான விபரீதமான நிகழ்விற்குக் காரணம், மலச்சிக்கல் வீக்கம் என்றும் அரை மணி நேரத்திற்கும் மேலாக கழிவறையில் ஒரே நிலையில் அமர்ந்திருந்தது என்றும் அவரை சோதனை செய்த மருத்துவர்கள் கூறினர்.
மேலும், நான்கு வயதில் இருந்தே அவருக்கு இப்பிரச்சனை இருப்பதாகவும் அதற்குரிய சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்ததால் இப்பொழுது மிக மோசமான நிலைமை அடைந்திருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

செய்தித்தாள் வாசிப்பது, செல்போன் பயன்படுத்துவது, புத்தகம் வாசிப்பது, மடிக்கணிணி போன்ற செயல்களை பலர் கழிவறையில் அமர்ந்து செய்கின்றனர். இதனால் பல மணிநேரம் அவர்கள் கழிவறையில் இருக்கின்றனர். இதனால் மலச்சிக்கல், மூலம், மலக்குடல் பிரச்சனைகள் வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

Related Posts: