தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 177.25 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே ஒதுக்கப்பட்டதால் தமிழக கர்நாடக எல்லை பகுதியில் பதற்றம் நிலவிவருகிறது.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரும், கர்நாடகாவிற்கு 184.75 டி.எம்.சி. தண்ணீரும் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. 2007ம் ஆண்டு வெளியிடப்பட்ட நடுவர்மன்ற இறுதி தீர்ப்பில் தமிழகத்திற்கு 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்திற்கு 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க முடியாது என கர்நாடகாவும், 192 டி.எம்.சி. தண்ணீரில் இருந்து கூடுதலாக 72 டி.எம்.சி. தண்ணீர் ஒரு ஆண்டிற்கு வழங்க வேண்டும் என தமிழகமும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில் ஏற்கெனவே இருந்த உத்தரவிலிருந்து 14 டி.எம்.சி. அளவிலான தண்ணீரை குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதால் தமிழகத்தில் உள்ள கர்நாடக வாகனங்கள், வணிக வளாகங்களுக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக-கர்நாடக எல்லை பகுதியில் கடும் பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் காவல் ஆணையர் சந்தித்து ஆலோசனை நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.