தமிழை மத்திய ஆட்சி மொழியாகவும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டுமென திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையானது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையானது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மோடி தெரிவித்த கருத்து அவருடைய மனசாட்சிக்கு உண்மையெனில், தமிழை மத்திய ஆட்சி மொழியாகவும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அதே போல, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, சமஸ்கிருதத்திற்கு இணையாக நிதி ஒதுக்க வேண்டுமெனவும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், உலகப் பொதுமறையாம் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென்றும் பிரதமரை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.