ஹைதராபாத் இளைஞர் ஒருவர், ப்ரியா பிரகாஷ் வாரியர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ படப்பாடலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நிலையில், அப்பாடலுக்கு இஸ்லாமிய அமைப்பான ஜமியா நிஜாமியா (Jamia Nizamia) ஃபத்வா அளித்துள்ளது.
ஓமர் லூலு இயக்கிய ‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கும் நிலையில், அத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாணிக்க மலராய பூவி’ என்ற பாடல், சமூகவலைதளங்களில் வைரலாகி, அத்திரைப்படத்தில் நடித்த ப்ரியா பிரகாஷ் வாரியரை பிரபலமடையச்செய்தது.
இந்நிலையில், ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், அப்பாடலில் இஸ்லாமியர்களின் கொள்கைகளை காயப்படுத்துவது போன்ற வரிகள் இடம்பெற்றிருப்பதாக கடந்த பிப்ரவரி 14ம் தேதி அப்படத்தின் இயக்குனர் மீது புகார் அளித்ததன்பேரில், அவர் மீது ஹைதராபாத் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து, இஸ்லாமிய அமைப்பான ஜமியா நிஜாமியா, அப்பாடலுக்கு ஃபத்வா அளித்துள்ளது.
ஃபத்வா அளிக்கப்பட்டால், அக்குற்றச்சாட்டினை உண்மைத்தன்மையை சோதனை செய்துவிட்டு, அது உண்மையாக இருந்தால், அப்பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று ஜமியா நிஜாமியாவின் அதிகாரி தெரிவித்தார்.
இஸ்லாமியர்களின் கொள்களை காயப்படுத்தும் விதத்தில் இப்பாடலின் இருப்பதாக, அவுரங்காபாத்தை சேர்ந்த சிலரும் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.