சனி, 17 பிப்ரவரி, 2018

​ரஜினிகாந்த் உருவபொம்மையை எரித்து கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம்..! February 17, 2018

Image

கர்நாடக மாநிலத்தில் உள்ள ராம் நகர் மாவட்டம் சன்னப்பட்னாவில் கன்னட அமைப்பினர் இன்று ரஜினிகாந்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட காவிரி நடுவர் மன்ர தீர்ப்புக்கு எதிராக கர்நாடகா தொடர்ந்த வழக்கில் நேற்று (16-02-2018) தீர்ப்பு வெளியானது. அந்த தீர்ப்பில் தமிழகத்திற்கு வழக்கமாக வழங்கும் நீரில் இருந்து 14.75 டி.எம்.சி நீரை குறைத்து வழங்கினால் போதுமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பிற்கு தமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக ரஜினிகாந்த் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். 

இது குறித்து நடிகர் ரஜினிகாந்த், “காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கருத்து தெரிவித்து இருந்தார். 

இதனால் கர்நாடகா மாநில மக்களுக்கு எதிராக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளதாகக் கூறி கண்னட அமைப்புகள் சில ரஜினிகாந்தின் உருவ பொம்மையையும், உருவப்படத்தையும் எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது